உத்தர பிரதேசத்தின் நொய்டா பகுதியில் இன்று ஊதிய உயர்வு கோரி நடைபெற்ற தொழிலாளர்களின் அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். போராட்டத்தின் போது சில தொழிலாளர்கள் கற்கள் எறிந்ததால் நிலைமை பதற்றமடைந்தது. இதையடுத்து பொலிசார் லாடிச் சார்ஜ் நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பல தொழிலாளர்கள் மற்றும் பொலிசார் காயமடைந்துள்ளனர். பதற்றம் காரணமாக சுற்றியுள்ள கடைகள் மூடப்பட்டன. பகுதியில் கூடுதல் பொலிஸ் படையினர் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்த தொழிலாளர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு பிரதிநிிகள் தொழிலாளர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.