கன்னியாகுமரி கடற்கரையில் காலை நடைப்பயணத்தில் மக்களுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின்
2026 சட்டசை தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று காலை கன்னியாகுமரி கடற்கரையில் நடைப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கூடியிருந்த மக்களுடன் நேரடியாக உரையாடினார். காலை நேர உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக கடற்கரையில் நடைபயணம் மேற்கொண்ட அவர், வழியில் சந்தித்த மக்களுடன் அன்பாக பேசிக்கொண்டார். இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதலமைச்சரின் எளிமையான அணுகுமுறையைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது அணுகுமுறையை பாராட்டிய மக்கள், தங்களது பிரச்சனைகளையும் கோரிக்கைகளையும் அவரிடம் நேரடியாக தெரிவித்தனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டு அவர்களது கருத்துகளை அறிந்து கொள்ளும் இந்த முயற்சி மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற மக்கள் தொடர்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.