மக்கள்தொகை அடிப்படையில் நடைபெறும் லோக்சபா தொகுதி மறுவரையறையில் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய பயனடையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள 80 தொகுதிகளுடன் கூடுதலாக 15 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக தமிழ்நாட்டின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததால் தற்போதுள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 3-4 தொகுதிகள் வரை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. இது தமிழ்நாட்டின் மத்திய அரசியலில் செல்வாக்கை பாதிக்கும். 2026ல் நடைபெறும் இந்த மறுவரையறை செயல்முறையால் தென்னிந்திய மாநிலங்கள் ஒட்டுமொ்தமாக பாதிக்கப்படும். கேரளா, கர்நாடகமும் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்திய மாநிலங்களின் அரசியல் ஆதிக்கம் அதிகரிக்கும் இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கவலையடைந்துள்ளன.